மறைந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது பரபரப்பு புகார்!

Report Print Vijay Amburore in இந்தியா

மாரடைப்பால் இறந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷின் மனைவி தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக, அவருடைய வீட்டு பணியாளர் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

நடிகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ் கடந்த மாதம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

இந்த நிலையில் அவருடைய மனைவி மீது வீட்டில் வேலை செய்து வந்த கேசவன் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில், "கடந்த 10 ஆண்டுகளாக ஜே .கே .ரிதீஷிடம் தான் பணியாற்றி வருவதாகவும். அவர், அவருக்கு சொந்தமான வீட்டில் தன்னையும் தன்னுடைய குடும்பத்தினரையும் தங்கி கொள்ளுமாறு கொடுத்து விட்டார் எனவும்.

இதனால் அவரிடம் பணி செய்ததற்கான ரூ.4 லட்சம் பணத்தை நான் பெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது அவருடைய மனைவி ஜோதி, தனக்கு வர வேண்டிய தொகை ரூ.4 லட்சத்தை கொடுக்காமல், வீட்டை காலி செய்ய வேண்டும் என, அடியாட்களுடன் வந்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.

அதே போல் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ஜோதியிடம் வீட்டை கொடுத்துவிட்டு ஓடிவிடு என, தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்ததாகவும் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...