தனக்கு திருமணமாகவில்லை என பொய் கூறி இளம் விதவையை ஏமாற்றி நபர் செய்த செயல்... அடுத்தடுத்து வெளியான தகவல்கள்

Report Print Raju Raju in இந்தியா

திருமணம் செய்வதாக ஆசை காட்டி விதவை பெண்ணிடம் ரூ.18¾ லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும் தெரியவந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (34). சிவில் பொறியாளர். திருமணமான இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இவர், தன்னை மருத்துவர் என்று கூறியும், திருமணம் ஆகாதவர் என்றும் அஜய், விதுட், விஜயகுமார், கிரிஜா சரவணன் என பல பெயர்களில் ஓன்லைன் திருமண தகவல் மையத்தில் போலியாக பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து திருச்சியை சேர்ந்த விதவையான தாமரைச்செல்வி. என்ற பெண் மருத்துவர்

சக்கரவர்த்தியை மணக்க விரும்புவதாக ஓன்லைன் மூலம் கூறினார்.

இதையடுத்து தாமரைச்செல்வியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறிய சக்கரவர்த்தி அவரிடம் நெருங்கி பழகினார்.

இதன்மூலம், ரூ.18 லட்சத்து 70 ஆயிரம் வரை தாமரைச்செல்வியிடம் இருந்து சக்கரவர்த்தி பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் திருமணம் பற்றி சக்கரவர்த்தி எதுவும் பேசாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் சக்கரவர்த்தியின் நடவடிக்கைகளில் தாமரைச்செல்விக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து விசாரித்ததில் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதும், அவர் போலி மருத்துவர் என்பதும் தெரியவந்தது.

இது குறித்து தாமரைச்செல்வி பொலிசில் புகார் கொடுத்த நிலையில் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து நீதிமன்றத்தை அவர் நாடிய நிலையில் உடனடி நடவடிக்கை எடுக்க பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்பேரில் பொலிசார் சக்கரவர்த்தியை கைது செய்தனர். மேலும் அவரின் மோசடி நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது கார் ஓட்டுனர் முருகன் என்பவரையும் கைது செய்தனர்.

விசாரணையில் சக்கரவர்த்தி மருத்து படிப்பை படித்தது போல் போலியான ஆவணங்கள் தயாரித்ததோடு சென்னையை சேர்ந்த ஒரு பெண் மருத்துவரையும் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

பெண் மருத்துவர்களை குறி வைத்தே அவர் மோசடிகளில் இறங்கியது உறுதியாகியுள்ளது.

மேலும் சக்கரவர்த்தி யாரையெல்லாம் எப்படி ஏமாற்றினார் என விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...