என்னை கைது செய்யட்டும்... எனக்கு பயமில்லை...காட்டமாக பேசிய கமல்ஹாசன்

Report Print Raju Raju in இந்தியா

பொலிசார் தன்னை கைது செய்யட்டும் எனவும் தனக்கு எவ்விதமான பயமும் இல்லை எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறிய நிலையில் அது பலத்த சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில் இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், நான் கோட்சேவை இந்து தீவிரவாதி என்று கூறியதில் எந்த தவறும் இல்லை. எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன்.

கோட்சே குறித்து பேச கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. ஆனால் மடத்தின் தலைவர்கள் கூட அதை பற்றி வரம்பு மீறி பேசுகிறார்கள். அவர்களை யாரோ தூண்டி விடுகிறார்கள்

என்னை கைது செய்தால் எனக்கு பிரச்சனை இல்லை. என்னை கைது செய்தால் மேலும் பதற்றம் அதிகரிக்கும்.

என்னை குறித்து அதிமுகவினரின் கருத்து அவர்களின் குணாதிசயத்தை காட்டுகிறது. எனக்கு இதற்கு எல்லாம் பயம் இல்லை. அரசியல் மிகவும் கீழ்த்தரமாக மாறிவிட்டது என காட்டமாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...