நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடைமொழியுடன் ஓபிஎஸ் மகனின் பெயர்: முடிவுக்கு முன் பொறிக்கப்பட்ட கல்வெட்டால் சர்ச்சை

Report Print Abisha in இந்தியா

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கோயில் கல்வெட்டில் ஓ.பி.ரவீந்திரகுமார் பெயருடன் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் என்று இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேனியில் உள்ள ஒரு கோவிலில் ராஜகோபுர கும்பாபிஷேகத்தை ஒட்டி கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பேருதவி புரிந்தவர்கள் என ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.ரவீந்திரகுமார் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

இதில், ரவீந்திரகுமார் பெயருடன் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் என கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாவதற்கு முன்பே எவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் என்று பெயர் பொறிக்கலாம்..? என சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த கல்வெட்டை உடனடியாக அகற்ற வேண்டும் என தேனி தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில் அவர் பெயர் தற்போது மறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers