40 மணிநேரம் கொடுமை... பாகிஸ்தானில் தாக்கப்பட்டாரா அபிநந்தன்: வெளியான தகவல்

Report Print Basu in இந்தியா

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, விங் கமாண்டர் அபிநந்தனை 40 மணிநேரம் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பிடியில் இருந்த 5 மணிநேரத்தில் அபிநந்தனிடம் முறையான விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து ராவல்பிண்டிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு விசாரணை நடத்தியுள்ளது.

அப்போது இருட்டு அறையில் அடைக்கப்பட்டு அதிக ஒலியுடன் சப்தம் எழுப்பி ஒவ்வொரு அரை மணிநேரத்துக்கும் ஒருமுறை ஒருவர் உள்ளே சென்று கடுமையாகத் தாக்கி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அபிநந்தன் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்.

விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானில் இருந்த 58 மணிநேரத்தில் 40 மணிநேரம் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனை இங்கு சிகிச்சை அளிக்கும்போது அபிநந்தனே பகிர்ந்துகொண்டதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்