நிஹானின் சிரிப்பு.. அம்ருதா ரியாக்ஷன்: கவனத்தை ஈர்க்கும் பிரனாய் மகன் வீடியோ

Report Print Arbin Arbin in இந்தியா

சாதி வெறிக்கு கர்ப்பிணி மனைவியின் கண் எதிரே படுகொலை செய்யப்பட்ட பிரனாய்யின் மகன் தொடர்பில் வெளியான வீடியோ ஒன்று தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

தெலங்கானாவில் சாதி வெறிக்கு கர்ப்பிணி மனைவியின் கண்முன்னே படுகொலை செய்யப்பட்ட பிரனாய்யின் குழந்தை தொடர்பில் இதுவரை ஒரு புகைப்படம் மட்டுமே வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தற்போது அம்ருதாவும் அவர் மகன் நிஹானும் சிரித்து மகிழ்கிற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில் குழந்தை நிஹான் சிரித்துக்கொண்டே இருக்கிறான். பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிற ஒரு நபரின் விரல்களைப் பிடித்துக்கொண்டு விளையாடுகிறான்.

மகனுடைய பொக்கை வாய் சிரிப்பைப் பார்த்து அம்ருதாவும் வாய் திறந்து சிரிக்கிறார். ஆனால், அந்தச் சிரிப்பு ஏனோ அவர் கண்களை எட்டவே இல்லை. அவர்களுக்கு அருகில் பிரனாய் புகைப்படமாக சிரித்துக்கொண்டிருக்கிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்