தூக்கில் சடலமாக தொங்கிய நடிகர் ராகவா லாரன்ஸின் உதவியாளர்!

Report Print Raju Raju in இந்தியா

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸின் உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகவா லாரன்ஸின் உதவியாளர் பரத். இவர் சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள வீட்டில் தனது நண்பர்களோடு சேர்ந்து வசித்து வந்தார்.

மாற்றுத்திறனாளியான இவர், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் குழந்தைகள் உள்பட பல திரையுலக பிரபலங்களின் குழந்தைகளுக்கு நடனம் கற்றுக் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில், நேற்றிரவு தனது வீட்டில் பரத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சினிமா தான் வாழ்க்கை என்றிருந்த அவருக்கு சினிமாவில் எதுவும் சாதிக்க முடியவில்லை என்ற விரக்தியில் கூட தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று அவரது நண்பர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்