மாமனாரின் குணம் குறித்து கணவரிடம் பலமுறை கூறிய மனைவி... இரவு வேலை முடிந்து வந்த அவருக்கு காத்திருந்த சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மாமனாரின் மோசமான குணம் குறித்து கணவரிடம் மனைவி கூறியும் அதை அவர் காது கொடுத்து கேட்காததால் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருத்தணியை சேர்ந்தவர் முனிகிருஷ்ணன். இவர் மனைவி யுவராணி.

லொறி ஓட்டுனரான முனி இரவு நேரங்களில் வேலைக்குச் சென்று விடுவார்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அவரின் தந்தை டில்லி பாபு தனது மருமகள் யுவராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதை கண்டித்த யுவராணி இது குறித்து தனது கணவர் முனியிடம் பலமுறை கூறியும் அவர் காது கொடுத்து கேட்கவில்லை.

மேலும் தன் தந்தை குறித்து வீண் பழி சுமத்தாதே என மனைவியை கண்டித்தார். இதனால் விரக்தி மற்றும் வேதனையடைந்த யுவராணி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த போது யுவராணி தூக்கில் தொங்குவதை பார்த்து முனி அதிர்ச்சியடைந்தார்.

இது தொடர்பாக பொலிசுக்கு தகவல் தரப்பட்ட நிலையில் யுவராணி சடலத்தை கைப்பற்றிய பொலிசார் முனி மற்றும் அவர் தந்தை டில்லிபாபுவையும் விசாரித்தனர்.

இதில் யுவராணி சாவுக்கு டில்லிபாபு தான் காரணம் எனத் தெரியவந்தது. இதையடுத்து டில்லிபாபுவை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்