நடுரோட்டில் வைத்து காவலரை கடித்த ஓட்டுநர்... எதற்காக தெரியுமா? வெளியான வீடியோ

Report Print Basu in இந்தியா

தமிழகத்தில் ஓட்டுநர் ஒருவர் பொதுவெளியில் வைத்து போக்குவரத்து காவலரை அடித்து, கடிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

ராமநாதபுரத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து வெளியான தகவலின் படி, பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போக்குவரத்து காவலர், பொது இடத்தில் வைத்து ஓட்டுநர் ஒருவரை அடித்து மரியாதை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால், பொருமை இழந்த ஓட்டுநர், காவலரை சரமாரியாக தாக்கி கடித்துள்ளார். இதனையடுத்து பொதுமக்கள் சம்பவயிடத்தில் கூடியுள்ளனர். தகவலறிந்து விரைந்த பொலிசார் ஓட்டுநரை தடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

சம்பவத்தில் ஈடுபட்ட ஓட்டுநர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே சமயம் சம்மந்தப்பட்ட காவலரிடம் விசாரணை கூட மேற்கொள்ளாமல் பொலிசார் விடுவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்