பிரபல நடிகரை விடுதலை செய்தது போல பேரறிவாளனையும் விடுவிக்கலாம்... இறுதியாக வெளியான உண்மை

Report Print Raju Raju in இந்தியா

பிரபல நடிகர் சஞ்சய் தத்தை விடுதலை செய்தது போல பேரறிவாளனையும் சிறையில் இருந்து விடுதலை செய்ய சட்டம் உள்ளது என பேரறிவாளனின் வழக்கறிஞர் பிரபு கூறியுள்ளார்.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதே போல ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனையும் விடுவிக்கலாம் என அவரின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பிரபு கூறுகையில், மகாராஷ்டிராவின் எரவாடா சிறை அதிகாரிகளிடம் நாங்கள் ஒரு மனு அளித்திருந்தோம். அதில் சஞ்சய் தத்தை விடுதலை செய்ததற்கு மத்திய அரசின் அனுமதி வாங்கியிருந்தீர்களா? எனக் கேட்டிருந்தோம். ஆனால் அவர்கள் தகவல்களை தரவில்லை.

இதுதொடர்பாக நாங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோரிக்கை வைத்த நிலையில் தற்போது அதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், சஞ்சய் தத்தை நன்னடத்தை காரணமாக விடுவிடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சிக்கலான விஷயம் என்னவென்றால், சஞ்சய் தேசிய குற்றத்தில் ஈடுபட்டு மத்திய அரசின் தடா சட்டத்தில் தண்டனை பெற்றவர். இவரை மத்திய அரசின் அனுமதியின்றி மாநில அரசு விடுவித்துள்ளனர்.

இதன்மூலம் எந்த வித வழக்கிலும் ஒருவரை நன்னடத்தை மூலம் மாநில அரசு விடுவிக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கும் ராஜீவ் கொலை வழக்கும் சிபிஐ-யால் விசாரிக்கப்பட்ட வழக்குகள். இரண்டு தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்ட வழக்கு. இரண்டுமே பயங்கர ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட வழக்கு. இந்த வழக்கிலும் சரி, எங்கள் வழக்கிலும் சரி இன்னும் தேடப்படும் குற்றவாளிகள் இருக்கின்றனர். ஆனால் எங்கள் வழக்கில் மட்டும் மத்திய அரசுக்கு மட்டும் உரிமை இருப்பதாக வஞ்சிக்கப்படுகிறது.

இதன்மூலம் அரசமைப்பு சட்டப்பிரிவு 161ன் படி மாநில அரசே பேரறிவாளனை விடுவிக்கலாம் என்பது உறுதியாகியுள்ளது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்