திருமண விழாவில் அனைவர் முன் நடனடமாடிய மனைவி: கழுத்தை நெரித்து கொன்ற கணவன்!

Report Print Vijay Amburore in இந்தியா

பீகார் மாநிலத்தில் அனைவர் முன்பும் நடனமாடிய மனைவியை, கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மாஞ்சி. இவருடைய மனைவி முனியா தேவி கடந்த 10 நாட்களுக்கு முன்பாக, உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

2 நாட்களுக்கு முன்பு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மாஞ்சியும் அவருடைய மாமனார் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இந்த நிலையில் கோலாகலமாக நடைபெற்ற திருமண நிகழ்வில், மாஞ்சி அவருடைய மனைவி முனியா தேவி உட்பட உறவினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அப்போது நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் முனியா தேவி நடனமாடியுள்ளார். அதனை பார்த்த மாஞ்சி, நடனமாட வேண்டாம் என மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அவருடைய பேச்சை உதாசீனப்படுத்திவிட்டு, முனியா தேவி தொடர்ந்து நடனமாடியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாஞ்சி, தனியாக தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு போய் கழுத்தை நெரித்துள்ளார். இதில் மயக்கமடைந்த முனியாவை அந்த இடத்திலே விட்டு சென்றுள்ளார்.

இதற்கிடையில் அப்பகுதியாக வந்த ஒருவர், முனியா மயக்கமடைந்து கிடப்பதை பார்த்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவமானது திருமணத்திற்கு வருகை தந்திருந்த அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தலைமறைவாக உள்ள மாஞ்சியை பொலிஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்