ஜெயலலிதா மரண வழக்கு: உச்ச நீதிமன்றம் அனுமதி

Report Print Basu in இந்தியா

ஜெயலலிதா மரண வழக்கு தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனைத் தலைவர் பிரதாப் ரெட்டி முன்வைத்த வேண்டுகோளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

அவர் சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி பேட்டியளித்துள்ளார்.

75 நாட்கள் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ம் திகதி மரணமடைந்தார்.

ஜெயலலிதா மரணத்தில் பல சந்தேகங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் ஏற்பட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது தமிழக அரசு . இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி கூறியதாவது, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் ஆணையத்தால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ஆணையத்தில் மருத்துவ வல்லுநர்கள் யாரும் இல்லை.

எனவே, மருத்துவ மதிப்பீடு மருத்துவ நிபுணர்களால் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்தோம், அதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது என பேட்டியளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்