என் சொந்த நாடே அடிமைப்பட்டு கிடக்கிறது... சிவப்பாக இருந்தால் தான் மோகம்... கர்ஜித்த சீமான்

Report Print Raju Raju in இந்தியா

என் சொந்த நாடே அடிமைப்பட்டு கிடக்கிறது எனவும், நீ பூமி தாயை நன்றாக பார்த்து கொண்டால், அது உன்னை நன்றாக பார்த்து கொள்ளும் எனவும் சீமான் கூறியுள்ளார்.

தமிழகத்தின் அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் செல்வத்தை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார்.

அவர் பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் 274- இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. ஒரு முதலாளி வாழ மொத்தநாட்டு மக்களையும் பலி வாங்க முடிவு பண்ணிவிட்டார்கள்.

என் சொந்த நாடே அடிமைப்பட்டு கிடக்கிறது. எனக்கு நீ என்ன வெச்சிருக்கிறே? 8 ஆண்டுகளாக கத்திட்டு வரேன். குடிக்க தண்ணிர் இல்லை, குடிக்க நீரில்லாம வெறும் குடத்தோடு சாகுவோம், இவங்களுக்கு தண்ணி குடுக்க துப்பு இல்லை, கெடுத்துடுவாங்கன்னு, நாட்டை சுடுகாடு ஆக்கிட்டு இருக்காங்கன்னு கதறினேன்.

ஆனா என் பேச்சை நீங்க யாருமே கேட்கல. ஏன்? இட்லி நம்ம இட்லி தான். ஆனால், குஷ்பு இட்லி, ஓவியா இட்லின்னு பெயர் வைத்தால் தான் சாப்பிட தோன்றுகிறது. காரணம், சிவப்பாக இருந்தால் ஒரு மோகம்.

நீ பூமி தாயை நன்றாக பார்த்து கொண்டால் தான் அது உன்னை நன்றாக பார்த்து கொள்ளும்.

ஹைட்ரோ கார்பன் எடுக்கறேன்னு நீ நோண்டினா,

உன் ஈரக்குலை காலியாயிடும். நீ மீத்தேன்னு எடுக்கறன்னு சொன்னா, நீ சாகுறது தவிர வேற வழி இல்லை என பேசியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்