இந்தியாவின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக ஐஎஸ் அமைப்பு அறிவிப்பு!

Report Print Vijay Amburore in இந்தியா

முதன் முறையாக இந்தியாவின் ஒரு மாகாணத்தை கைப்பற்றியிருப்பதாக ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் உள்ள ஆம்ப்சிடோ நகரில் சனிக்கிழமையன்று பயங்கரவாதிகளுக்கும், இந்திய பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிசூடு நடைபெற்றது.

இதில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

இந்த நிலையில் ஐஎஸ் அமைப்பின் செய்தி இணையதளமான அமக் நியூஸ் ஏஜென்சி (Amaq News Agency) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியாவில் விலயாஹ் ஆஃப் ஹிண்ட் (Wilayah of Hind) என்கிற மாகாணத்தை ஐஎஸ் அமைப்பு தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாகவும், சோபியான் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது இந்திய பாதுகாப்புப்படையினரால் இஷ்ஃபக் அகமது சோபி என்பவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers