அவள் அப்படி செய்ததால் கொலை செய்தேன்... இளம் பெண்ணை கொன்ற குற்றவாளியின் வீடியோ வாக்குமூலம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் இளம் பெண்ணை குத்தி கொலை செய்தது ஏன் என்று குற்றவாளி அளித்த வீடியோ வாக்குமூலம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் தற்போது தனது குடும்பத்துடன் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் வசித்து வருகிறார்.

இவருக்கு திலகாவதி என்ற மகள் உள்ளார். திலகாவதி, விருத்தாச்சலம் பகுதியில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன், திலகாவதி தன்னை யாரோ கத்தியால் குத்திவிட்டதாக உறவினர் ஒருவருக்கு போன் மூலம் தெரிவித்துள்ளார்.

இதனால் உறவினர் மருத்துவமனைக்கு அழைத்துசெல்லும் போது பாதி வழியில் திலகவதி உயிரிழந்தார். இதுதொடர்பாக, விசாரணை நடத்திய பொலிசார், பேரளையூரை சேர்ந்த ஆகாஷ் என்பவரை கைது செய்தனர்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆகாஷ், ஏன் கொன்றேன் என்பதை, வீடியோ வாக்குமூலமாக அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, தானும், திலகவதியும் ஒரே பள்ளியில் படித்தோம். படித்துமுடித்தபிறகு அவள் கல்லூரியில் சேர்ந்தாள். நான் வேலைக்கு சென்று விட்டேன்.

எங்கள் நட்பு இன்றளவும் தொடர்ந்தது. சம்பவம் நடந்த அன்று அவளது வீட்டிற்கு சென்றேன். அவள் என்னை அடித்தாள். என்மீது தண்ணீர் ஊற்றினாள். அந்த ஆத்திரத்தில் அவளை கத்தியால் குத்தி கொன்றதாக ஆகாஷ் கூறினான்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers