எனக்கு திருமணம் ஆகவில்லை..... என்னை கருணை கொலை செய்துவிடுங்கள்: விரக்தியில் கடிதம் எழுதிய நபர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

35 வயதாகியும் எனக்கு திருமணமாகவில்லை அதனால் என்னை கருணை கொலை செய்துவிடுங்கள் என நபர் ஒருவர் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

புனேவை சேர்ந்த 35 வயதான நபர் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு எழுதியுள்ள கடிதத்தில், நான் செய்யும் வேலையில் எனக்கு விருப்பமில்லை, மேலும் திருமண வாழ்க்கையும் கைகூடவில்லை மற்றும் எனது பெற்றோருக்கு நான் எதையுமே செய்யாத காரணத்தால் என்னை கருணை கொலை செய்துவிடுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது, குறித்த நபரின் பெற்றோருக்கு 80 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இவருக்கு திருமணம் வேறு ஆகவில்லை. இதனால் விரக்தியில் இருந்துள்ளார்.

நன்கு படித்தவர், பெற்றோர் மீது அதிக அன்பு வைத்துள்ள இவருக்கு நாங்கள் அறிவுரை வழங்கியுள்ளோம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers