பெண்ணை கொலை செய்துவிட்டு திருமணத்திற்கு தயாரான மாப்பிள்ளை... விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் திருமணத்திற்கு சில நாட்களே இருந்த போது மணமகன் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரை விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பீகாரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். 28 வயதான இவருக்கு வரும் 12-ஆம் திகதி திருமணம் முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதற்கான வேலையில் பரபரப்பாக சந்தோஷ்குமார் இயங்கிக் கொண்டிருந்த நிலையில், பொலிசாரை அவரை திடீரென்று கைது செய்தனர்.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், சந்தோஷ்குமார் நிர்மலா என்ற பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

நிர்மலா என்ற பெண் ஏற்கனவே ஜார்கண்டைச் சேர்ந்த சரோஜ் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். திருமணம் செய்த சில வருடங்களிலே சரோஜ் இறந்துவிடவே, அப்போது நிர்மலாவிற்கு சந்தோஷ்குமாரின் நட்பு கிடைத்துள்ளது.

சரோஜ் தான் இறப்பதற்கு முன் வீட்டு மனை ஒன்றை வாங்கியுள்ளார், அதை நிர்மலாவின் பெயரில் முடித்துள்ளார். இதனால் அவரது உறவினர்கள் வீட்டை கைப்பற்ற முயற்சித்ததால், சந்தோஷிடம் இந்த இடத்தை விற்று கொடுப்பதற்கு உதவும் படி கேட்டுள்ளார்.

அதன் படி இருவரும் டெல்லிக்கு வந்து அங்கிருக்கும் Subzi Mandi ஏரியாவில் வீடு ஒன்று எடுத்து கணவன் மனைவி போன்று திருமணம் செய்யாமல் சுமார் 6 மாதம் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி சந்தோஷிற்கு அவர் மீது ஒரு காதலும் இருந்துள்ளது., இதனால் இருவரும் எல்லை மீறி நெருக்கமாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் தான் நிர்மலா அவருக்கு தெரியாமல் போன் ஒன்றை பயன்படுத்தி வருவது சந்தோஷிற்கு தெரியவந்துள்ளது, அதுமட்டுமின்றி அந்த போனில் நிர்மலா ஏதோ கொலை செய்யும் திட்டம் பற்றிய பேசியதாகவும், இதனால் சந்தேகமடைந்த சந்தோஷ் அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதை அவர் திட்டமிட்டு செய்துள்ளார். நிர்மலா உடல் நிலை சரியில்லாத நேரத்தில் அவரின் பாலில் அதிகளவு மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். இதனால் பாலை குடித்த நிர்மலா மயக்கநிலைக்கு சென்றவுடன், அவரை பாலுத்தின் பை ஒன்றில் வைத்து அதன் பின் பாக்ஸ் ஒன்றில் அவரது உடலை வீட்டில் மறைத்து வைத்துள்ளார்.

அப்போது அங்கிருந்த வந்த துர்நாற்றத்தால் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க இந்த சம்பவம் தெரியவந்துள்ளது. அவரை கொலை செய்து விட்டு மீண்டும் பீகார் வந்த சந்தோஷ் அவரின் பணங்களை வைத்து தன்னுடைய திருமணத்திற்கான வேலைகளை செய்து வந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers