14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை! போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடி கைது

Report Print Kabilan in இந்தியா

தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புதுமணியாரம்பட்டியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கட்டிட தொழிலாளியான இவருக்கு, மனைவி மற்றும் மகள் உள்ளனர். மதுபழக்கத்திற்கு அடிமையான ரவிச்சந்திரன், தினமும் தனது மனைவி மற்றும் மகளை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 30ஆம் திகதி, ரவிச்சந்திரன் வீட்டில் இருந்த மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அதன் பின்னர் மது அருந்திய அவர், தனது மகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார் என்று கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து குறித்த சிறுமி, தனது தந்தை செய்த காரியம் குறித்து தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் உடனடியாக தனது மகளை, தாத்தா வீட்டிற்கு இரவோடு இரவாக அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், தனது கணவர் மற்றும் அவரது தாய், தந்தை, சகோதரிகள் ஆகியோர் இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என்றும், மீறி கூறினால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியதாக ரவிச்சந்திரனின் மனைவி பொலிசில் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் ரவிச்சந்திரனை கைது செய்த பொலிசார், அவரது தாய், தந்தை, சகோதரிகள் ஆகியோர் மீதும் கொலை மிரட்டல் பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers