மணமேடைக்கு வந்த மணமகன்.. தாலிக்கட்டும் நேரத்தில் வேறு நபரை மணந்த மணப்பெண்.. காரணம் என்ன தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமண மேடையில் மாப்பிள்ளைக்கு பதிலாக வேறு நபரை மணப்பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் லோனி ட்ரோனிகா நகரை சேர்ந்த இளம் பெண்ணுக்கும், இளைஞருக்கும் நேற்று திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

தாலி கட்டுவதற்கு முன்னர் மாலைகள் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது, அப்போது முழு குடிபோதையில் மணமகன் மேடைக்கு வந்தார்.

போதை காரணமாக அவரால் சரியாக நிற்க கூட முடியவில்லை, இதை பார்த்த மணப்பெண் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து குடிக்கு அடிமையானவரை திருமணம் செய்ய முடியாது என அனைவர் முன்னிலையிலும் அவர் அதிரடியாக கூறினார்.

இதன்பின்னர் மணப்பெண்ணின் உறவினர் ஒருவர் தங்கள் வீட்டு இளைஞர் அவரை மணக்க விரும்புவதாக கூறினார்.

இதற்கு சம்மதம் தெரிவித்த மணப்பெண் அந்த இளைஞரை மணக்க ஒப்பு கொண்ட நிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமண நேரத்தில் மணமகனுக்கு பதிலாக வேறு நபரை மணப்பெண் திருமணம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...