இலங்கை குண்டு வெடிப்பு: கண்காணிப்பு வளையத்தில் இந்தியாவை சேர்ந்த 25 மதத்தலைவர்கள்

Report Print Abisha in இந்தியா

இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக இந்தியாவை சேர்ந்த 25பேர் கண்காணிப்பு வளையத்தில் இருப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்று கொண்ட நிலையில் பல்வேறு நாடுகளிலிருந்து இதற்கு ஆதரவாக செயல்பட்டவர்களை கைது செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், குண்டுவெடிப்பு குறித்த விசாரணையில், தமிழகம் மற்றும் கேரளத்தில் தீவிரவாதிகளுடன் 25 மதத்தலைவர்கள் தொடர்பு கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து polimer news செய்தி வெளியிட்டுள்ளது.

இளைஞர்களை தங்கள் மத அடிப்படைவாத கருத்துகளால் மூளைச் சலவை செய்து தீவிரவாதத்திற்கு தூண்டுவதை இவர்கள் வழக்கமாக கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இவர்கள் மீது வழக்கு எதுவும் பதியபடவில்லை என்ற போதும் அல்கொய்தா, ஐ.எஸ் உள்ளிட்ட சர்வதேச தீவிரவாத இயக்கங்களுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே அவர்களை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக உளவு துறை தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers