திருமணமான ஒரு நாளில் கடத்தப்பட்ட புதுப்பெண்.... திரும்பி வந்து கூறிய ஒரு வார்த்தையால் அதிர்ச்சியில் உறைந்த கணவன்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமணமான ஒருநாளில் இளம்பெண் காதலனுடன் ஓடிபோனதாக கூறப்பட்ட நிலையில் அவர் தன்னை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூரை சேர்ந்தவர் வினிதா. இளம் பெண்ணான இவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் 4 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

திருமணம் நடந்த அடுத்தநாள் புதுப்பெண் வினிதா தனது கணவருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த இன்னொரு கார் புதுமண தம்பதியின் கார் மீது மோதியது.

பின்னர் காரில் இருந்து இறங்கிய சில நபர்கள், தம்பதி இருந்த காரின் கதவை திறந்து புதுமாப்பிள்ளையை கீழே தள்ளி அடித்து உதைத்தனர்.

இதையடுத்து வினிதாவை தங்கள் காரில் ஏற்றி கொண்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டனர்.

அடிப்பட்ட புதுமாப்பிள்ளை இது குறித்து பொலிசில் புகார் அளித்த நிலையில் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

விசாரணையில் வினிதாவை அழைத்து கொண்டு போனது பிரயக் ஜின்கர் என்ற இளைஞர் மற்றும் அவர் நண்பர்கள் என தெரிந்தது.

ஜின்கர் காரில் அழைத்து சென்ற வினிதாவுடன் அவருக்கு முன்னார் காதல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வினிதா காதலனுடன் ஓடிபோய்விட்டதாக கூறப்பட்டட நிலையில் நேற்று ஜெய்ப்பூரில் இருந்த வினிதா, ஜின்கர் மற்றும் அவரின் 4 நண்பர்களை பொலிசார் பிடித்தனர்.

இதையடுத்து வினிதாவிடம் பொலிசார் விசாரணை நடத்திய போது, ஜின்கரை நான் காதலித்தது உண்மை தான், ஆனால் எனக்கு அவரை திருமணம் செய்ய விருப்பம் இல்லாமல் இருந்தது.

ஆனால் என்னை கொலை செய்துவிடுவதாக தொடர்ந்து அவர் மிரட்டி வந்தார்.

இந்நிலையில் தான் என்னை வலுக்கட்டாயமாக அவர் கடத்தி சென்றுவிட்டார் என கூறினார்.

இதோடு தன்னால் தான் தனது கணவருக்கு அடிப்பட்டது என கூறிய வினிதா அவருக்கு ஆறுதல் கூறியதோடு கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறினார்.

இதன்பின்னர் சில மணி நேரம் கழித்து வினிதா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிபதி முன்னால் வேறு மாதிரி வாக்குமூலம் அளித்தார்.

அதாவது, தனது கணவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை எனவும், பெற்றோர் வீட்டுகே செல்ல விரும்புவதாகவும் கூறினார், வினிதாவின் இந்த வார்த்தையை கேட்டு அவர் கணவர் அதிர்ச்சியடைந்தார்.

இந்நிலையில் வினிதாவை தொண்டு நிறுவனத்தில் தற்காலிகமாக தங்க வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவரை கடத்திய ஜின்கர் மற்றும் 4 பேர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers