இறுதிச்சடங்கின் போது பாசப்போராட்டம் நடத்திய பாகன்: கண்கலங்க வைக்கும் வீடியோ!

Report Print Vijay Amburore in இந்தியா

கேரளாவில் பாசமாக வளர்ந்த யானை இறந்ததை பொறுத்து கொள்ள முடியாத பாகன், அதன்மேல் சாய்ந்தவாறு கதறி அழும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

கேரளா மாநிலத்தில் 'யானைகளின் இளவரசன்' என உள்ளூர் மக்களால் பாசமாக அழைக்கப்படும் யானை கடந்த சில நாட்களுக்கு உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.

இதனை கேட்ட உள்ளூர் மக்கள் அனைவரும் கூடி, யானைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், அதனை வளர்த்த பாகன் கட்டியணைத்தபடியே கதறி அழுகிறார். அருகாமையில் இருந்தவர்கள் விலக்கிவிட முயற்சித்தும் அவர் பிடியில் இருந்து விலகாமல் தொடர்ந்து அழுதுகொண்டிருந்தார்./p>

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்