இந்தியாவின் அனுமதியற்ற பகுதிகளில் நுழைந்த பாகிஸ்தான் விமானம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய எல்லைக்குள் அனுமதியில்லாத வான்வெளியில் பறந்த பாகிஸ்தான் சரக்கு விமானம் ஒன்றை இந்திய விமானப்படை இடைமறித்து தரையிறங்க வைத்துள்ளது.

தரையிறங்கிய அந்த விமானத்தின் குழுவினரிடம் இந்திய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பயணிகள் விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள, கட்ச் பாலைவனத்தின் வான்வெளியில் ஆண்டனோவ் ஏ.என்-12 வகை பாகிஸ்தான் சரக்கு விமானம் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளது.

இதனையடுத்தே இந்திய விமானப்படை இடைமறித்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க வைத்தது.

அந்த விமானத்தில் உள்ள பொருட்களை சோதனை செய்ய அருகில் உள்ள தளங்களில் உள்ள குழுவினைரை இந்திய விமானப்படை ஜெய்ப்பூருக்கு அனுப்பவுள்ளது.

கராச்சியில் இருந்து டெல்லி செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்த அந்த ஆண்டனோவ் ஏ.என்-12 விமானம்,

தாம் பயணிக்க வேண்டிய பாதையில் இருந்து விலகி, குஜராத்தின் வடக்குப் பகுதியில், பறக்க அனுமதி இல்லாத வான்வெளிக்குள் நுழைந்தது.

மிகவும் எச்சரிக்கையாக இருந்த இந்திய விமானப்படை விமானத்தால் தடுத்து, இடைமறிக்கப்பட்டு அது தரையிறங்க வைக்கப்பட்டது,

அந்த விமானம் அனுமதி வழங்கப்படாத வான்வெளியில் பறப்பது ரேடார் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பின் இரு சுகோய்-30 எம்.கே.ஐ ஃபைட்டர் விமானங்களை அவை இயக்கத் தாயாராக்கியதாக செய்திகள் வெளியானது.

முதலில் பதில் சமிக்ஞை எதையும் தராத அந்த விமானம் ஜெய்ப்பூருக்கு 60 கிலோ மீட்டர் தொலைவில் கீழிறங்க தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்