வேறொருவரின் மனைவியை கர்ப்பமாக்கியவர்! அவரது திருமண நாளில் நடந்த சம்பவம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

பெங்களூரில் வேறொருவரின் மனைவியை கர்ப்பாக்கிவிட்டு ஏமாற்றிய உடற்பயிற்சியாளரை அவரது திருமண நாளில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

தொட்டபள்ளாப்பூர் பகுதியை சேர்ந்த கவுதம் என்பவர் புல்லட் ஜிம் என்ற பெயரில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்தார்.

கவுதம் பயிற்சியாளராகவும் இருக்கிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஸ்வேதா என்ற பெண் இவரது உடற்பயிற்சி மையத்தில் இணைந்துள்ளார்.

ஸ்வேதாவுக்கு டிப்ஸ் கொடுப்பது போன்று அவரது தொலைபேசிக்கு தொடர்பு கொண்ட கவுதம் நாளடைவில் அவருடன் நெருக்கமாகியுள்ளார்.

இந்நிலையில் தான் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக அவரை விட்டு பிரிந்து தந்தையுடன் வசித்து வருவதாக கவுதமிடம், ஸ்வேதா தெரிவித்துள்ளார்.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கவுதம், ஸ்வேதாவுக்கு ஆறுதல் கூறுவது போன்று தனது நெருக்கத்தை அதிகப்படுத்தியுள்ளார். இதன்பிறகு, திருமண ஆசை காட்டி ஸ்வேதாவை கர்ப்பமாக்கியுள்ளார்.

இந்நிலையில்தான் கவுதமுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நேற்று திருமணம் நடைபெறவிருந்தது. இதனை அறிந்த ஸ்வேதா நடந்தவை குறித்து பொலிசில் புகார் அளித்து, தாலி கட்டும் நேரத்தில் மண்பத்திற்குள் நுழைந்து திருமணத்தை அதிரடியாக நிறுத்தியுள்ளார்.

பொலிசார் கவுதமை கைது செய்ததோடு மட்டுமல்லாமல் அவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற தந்தையையும் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்