திறந்த கால்வாயில் தரையிறங்கிய விமானம்: 2 வருடங்களுக்கு பின் வெளியானது விபத்திற்கான காரணம்

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் கொச்சி விமான நிலையத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று கால்வாயில் தரையிறங்கியதற்கான காரணம் 2 வருடங்களுக்கு பின் வெளியாகியுள்ளது.

2017, செப்டம்பர் மாதம் 4ம் திகதி அபுதாபியில் இருந்து 102 பயணிகளுடன் கொச்சி வந்த விமானம் திறந்த கால்வாயில் தரையிறங்கியது. இதில் மூன்று பயணிகள் காயமடைந்தனர், விமானத்திற்கு கடும் சேதம் ஏற்ப்பட்டது.

இந்நிலையில், கடும் மழையும், மோசமான வானிலையே விபத்திற்கு காரணம் என அறிவிக்கப்பட்டது. 2 வருடங்களுக்கு பின் விபத்திற்கான மற்றொரு காரணம் வெளியாகியுள்ளது.

விமானத்தின் இரு விமானிகளுக்குள் இருந்த வயது வித்தியாசமே விபத்திற்கான மற்றொரு காரணம் என தெரியவந்துள்ளது. மூத்த ஆண் விமானிக்கும் அவருடன் விமானத்ததை இயக்கிய பெண் இணை விமானிக்கும் இடையே 30 வயது வித்தியாசம் இருந்துள்ளது.

இதனால், விமானம் தரையிறங்கும் போது இணை விமானி கூறிய பரிந்துரைக்கோ, எச்சரிக்கைக்கோ மூத்த விமானி செவிசாய்க்காமல் விமானத்தை தரையிறக்கியதே விபத்தற்கான காரணமாகும்.

இச்சம்பவத்திற்கு பின்னர், அதிக வயது வித்தியாசம் மற்றும் அனுபவ வித்தியாசம் உள்ள விமானிகளை ஒரே விமானத்தில் பணியாற்ற அனுமதிப்பதை இனி தவிர்க்க வேண்டும் என விமான போக்குவரத்த அதிகாரிகள், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்