திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றினார்: தமிழக மக்கள் மத்தியில் பிரபலமான ஆசிரியர் பகவான் மீது புகார்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தமிழக மக்கள் மத்தியில் பிரபலமான அரசு பள்ளி ஆசிரியர் பகவான் மீது ஏமாற்று புகார் அளிக்கப்பட்டதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் பகவான் வெள்ளியகரத்தில் பணியாற்றியபோது வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இவர் பணியிடமாற்றம் செய்யப்படுவதை விரும்பாத மாணவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவரை சூழ்ந்து அழுதனர். இந்த செய்தி தமிழகம் முழுவதும் பரவி மக்கள் மத்தியில் பிரபலமானார் ஆசிரியர் பகவான்.

இந்த நிலையில் வெள்ளியகரத்தை சேர்ந்த நாதமுனி என்பவர் பொலிசில் அளித்துள்ள புகாரில், எனது மகளை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்த பகவான், தற்போது மறுப்பு தெரிவிக்கிறார் என புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக காவல் நிலையம் வரவழைக்கப்பட்டு ஆசிரியர் பகவானிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்