16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அழைத்துச் சென்று இளைஞன் செய்த செயல்! விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் சிறுமியை காதலிப்பதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னை திரு.வி.க. நகரைச் சேர்ந்த தம்பதியின் 16 வயது மகள் திடீரென காணாமல் போனதால், அவர்கள் அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது, சிறுமி அரக்கோணத்தில் இருப்பதை பொலிசார் கண்டுபிடித்தனர்.

அதன் பின்னர் அங்கு சென்று சிறுமியை மீட்ட பொலிசார், தொடர்ந்து நடத்திய விசாரணையில், திரு.வி.க. நகரைச் சேர்ந்த பெருமாள் என்ற நபரை காதலித்ததும் இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

அதன் பின் இருவரும் அரக்கோணத்தில் தங்கியுள்ளனர்.

மேலும் பெருமாளின் நண்பனான அரவிந்த் என்பவனும் அவர்களுடன் தங்கியுள்ளார். அப்போது பெருமாள், அரவிந்த் ஆகிய இருவருமே அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்த வழக்கு பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு பெருமாள் அரவிந்த் இருவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்