நள்ளிரவு நேரத்தில் தாக்குதலுக்கு ஆளான தமிழ்ப்பெண்: நடந்த சம்பவம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கேரளாவில் நள்ளிரவு நேரத்தில் தாக்குதலுக்கு ஆளான தமிழ்ப்பெண்ணை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.

கேரள மாநிலம் திருச்சூரில் வசித்து வந்த தமிழகத்தை சேர்ந்த ஜோடி, நள்ளிரவு நேரத்தில் சினிமா பார்த்துவிட்டு நடந்து வந்துள்ளனர்.

அப்போது, மர்மநபர் ஒருவர் , தமிழ்ப்பெண்ணின் கணவரை தாக்கி கீழே தள்ளிவிட்டு அடுத்ததாக அப்பெண்ணையும் தாக்கியுள்ளார். தாக்குதல் நடந்த நேரத்தில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஜானிகுட்டி மற்றும் ஷித் ஆகிய இருவரும், தமிழ்ப்பெண்ணை காப்பாற்ற முயற்சித்துள்ளனர், ஆனால் குறித்த மர்மநபர் பளிங்கு கற்களை கொண்டு அவர்கள் இருவரையும் தாக்கியுள்ளார்.

இதில், விலா எழும்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டும் தொடர்ந்து தமிழ்ப்பெண்ணை காப்பாற்ற போராடியுள்ளனர். ஒரு கட்டத்தில் ஆம்புலன்ஸின் சைரன் சத்தத்தை தொடர்ந்து ஜானிகுட்டி எழுப்பியதில், அப்பகுதி மக்கள் அந்த இடத்தில் வந்துள்ளனர்.

பொதுமக்களுடன் சேர்ந்து மர்மநபரை தாக்கி தமிழ்ப்பெண்ணை மீட்டார் ஜானிகுட்டி. இதனைத்தொடர்ந்து பொலிசாரிடம் மர்மநபர் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இளம்பெண்ணை நள்ளிரவு நேரத்தில் துணிச்சலாக காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மேலும், கைது செய்யப்பட்ட நபர் சைக்கோவா என்கிற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்