பெண் வேட்பாளர் குறித்து வெளியான மோசமான துண்டுசீட்டு: சவால் விட்ட கெளதம் காம்பீர்!

Report Print Vijay Amburore in இந்தியா

பெண் வேட்பாளர் குறித்து வெளியான மோசமான துண்டுசீட்டிற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என பாஜக சார்பில் போட்டியிடும் கெளதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கெளதம் காம்பிர், பாஜக கட்சியின் சார்பில் கிழக்கு டெல்லியில் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் அதிஷி போட்டியிடுகிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. கெளதம் காம்பிர் 2 வாக்காளர் அடையாள அட்டையுடன் போட்டியிடுவதாக அதிஷி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நிலையில் அதிஷியை மோசமாக விமர்சனம் செய்த துண்டுசீட்டு ஒன்று அப்பகுதியில் வெளியிடப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்த, துண்டுசீட்டை வெளியிட்டது பாஜகவின் வேலை என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. ஆனால் பாஜகவினர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கெளதம் கம்பீரை விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் கெளதம் காம்பிர், “அவர்களிடம் நான் இதனை செய்தேன் என்று நிரூபித்தால், ஆதாரம் வழங்கினால் இப்போதே அரசியலில் இருந்து விலகுகிறேன். 23-ம் தேதி சமர்பித்தாலும் நான் விலகுவேன். இதே சவாலை கெஜ்ரிவாலும் ஏற்கவேண்டும். ஆதாரத்தை சமர்பிக்கவில்லை என்றால் 23-ம் தேதிக்கு பின்னர் கெஜ்ரிவால் அரசியலில் இருக்க கூடாது,” என சவால் விடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers