தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு! சத்யபிரதா சாஹு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Report Print Basu in இந்தியா

தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பேட்டியளித்துள்ளார்.

சத்யபிரதா சாஹு அளித்த பேட்டியில், தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலின் போது தவறு நடந்த 46 இடங்களில் மூன்று வாக்குச்சாவடிகளிலும் ஏற்கனவே பரிந்துரைத்த 10 வாக்குச்சாவடிகளிலும் சேர்த்து 13 வாக்குச்சாவடிகளுக்கு மே 19 ஆம் திகதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்துள்ளார்.

மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளின் விவரம், திருவள்ளுர், பூந்தமல்லியில் ஒரு வாக்குச்சாவடி. தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டியில் 8 வாக்குச்சாவடி.

ஈரோடு, காங்கேயத்தில் ஒரு வாக்குச்சாவடி. கடலூர், பண்ருட்டியில் ஒரு வாக்குச்சாவடி. தேனி, பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டி என இரண்டு வாக்குச்சாவடி என மொத்தம் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers