வீட்டில் தனியாக இருந்த மாணவி... அந்த சமயத்தில் உள்ளே புகுந்த இளைஞர்... அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் வீட்டில் தனியாக இருந்த மாணவியை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த நிலையில் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (50). இவர் மனைவி கொளஞ்சி.

தம்பதியின் மகள் திலகவதி (19). இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் படித்து வந்தார்.

நேற்று காலை சுந்தரமூர்த்தி வேலை தொடர்பாக வெளியூர் சென்று விட்டார். கொளஞ்சி உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தார்.

இதையடுத்து திலகவதி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். வீட்டில் அவர் தனியாக இருந்தார்.

அந்த நேரத்தில் ஆகாஷ் (19) என்ற வாலிபர் திலகவதி வீட்டுக்குள் புகுந்த நிலையில் அவரை கத்தியால் சரமாரியாக குத்தினார்.

இதில் காயம் அடைந்த திலகவதி கூச்சலிட்ட பின்னர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

மாணவியின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதையறிந்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வந்து திலகவதியை ஏற்றி கொண்டு சென்ற நிலையில் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்த நிலையில் தலைமறைவாக இருந்த ஆகாஷை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆகாஷ் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார். பின்பு தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தது தெரிய வந்தது.

மாணவியை ஆகாஷ் கொலை செய்ததற்கு ஒருதலை காதல் காரணமா அல்லது வேறு காரணமா என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers