7 தமிழர்களின் விடுதலை விவகாரம்! ராஜீவ்காந்தியுடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

Report Print Raju Raju in இந்தியா

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேர் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

ஏழுபேரை விடுவிக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக அவர் எந்தவொரு முடிவையும் இன்னும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

இந்நிலையில் ஏழு பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசின் அமெரிக்கை நாராயணன், ராம சுகந்தன், மற்றும் குண்டுவெடிப்பில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினரும் இணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் அதை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers