காதலியை மகிழ்விக்க இளைஞர் செய்த திடுக்கிடும் செயல்... விசாரணையில் அம்பலமான உண்மை

Report Print Raju Raju in இந்தியா

காதலியை மகிழ்விக்க பேக்கிரியில் லட்சக்கணக்கான பணத்தை திருடிய இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை சேர்ந்தவர் பெருமாள். இவர் ஐந்து வருடங்களாக பேக்கிரி கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பேக்கிரியை மூடிய பெருமாள் நேற்று இரவு கடையை திறந்தார்.

அப்போது பேக்கரியின் மேல்கூரை பிரிக்கப்பட்டு, கல்லாப்பெட்டியில் இருந்த பணமும் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில், கடையில் இருந்த 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்கபணம் மற்றும் 2 பவுன் தங்க காசுகள் திருடப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் கடையின் உள்ளே இருந்த கண்காணிப்பு கேமிராவின் ஹார்ட் டிஸ்க்கையும் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பேக்கரிக்கு எதிரே பழக்கடை நடத்தி வரும் மதியழகன் என்பவரை விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மதியழகன் ஒன்றரை லட்சம் மதிப்பில் பைக் வாங்கியிருந்த நிலையில் திடீரென அவருக்கு ஆடம்பரமான பைக் கிடைத்தது எப்படி என விசாரித்ததில் பேக்கரியில் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

தனது காதலியை மகிழ்விக்க பேக்கரியில் பணத்தில் திருடி புதிய பைக் வாங்கியதாகவும், காதலிக்கு தங்க சங்கிலி வாங்கி கொடுத்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து மதியழகனை கைது செய்த பொலிசார் பைக் மற்றும் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers