பிரபல நடிகை வெளியிட்ட சர்ச்சையான புகைப்படம்...அதிர்ந்து போன நெட்டிசன்கள்

Report Print Basu in இந்தியா

மும்பையை சேர்ந்த பிக் பாஸ் பிரபலமும், நடிகையுமான ராக்கி சாவந்த் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படத்தால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

ராக்கி சாவந்த் தனது விசித்திர வீடியோக்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டவர்.

இந்நிலையில், மே 8ம் திகதி ராக்கி சாவந்த் வெளியிட்ட புகைப்படத்தால் சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்ந புகைப்படத்தில் ராக்கி சாவந்த் நதியோரத்தில் மினு மினுக்கும் உடையணிந்து பாகிஸ்தான் கொடியை கையில் ஏந்திய படி நின்று போஸ் கொடுத்துள்ளார். இதை கண்ட பலர் அவரை கடுமையாக விமர்சித்து பதிவிட்டனர்.

இந்நிலையில் உடனே ராக்கி சாவந்த் புகைப்படம் குறித்து விளக்கமளித்து வீடியோ ஒன்றை பதிவிட்டார், அதில் அவர் கூறியதாவது, தாரா 370 என்ற திரைப்படத்தில் படப்பிடிப்பில் உள்ளதாகவும், குறித்த படத்தில் அவர் பாகிஸ்தான் பெண்ணாக நடிப்பதாக விளக்கமளித்தார்.

நான் இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன் எனினும் இது என்னுடைய கதாபாத்திரம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...