வீட்டில் தனியாக இருந்த மருமகள் மற்றும் மாமியார்... நள்ளிரவில் நடந்த பதறவைக்கும் சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் மாமியாரும், மருமகளும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் நபீனா பேகம் (55). இவர் மருமகள் தயீப் (25).

இருவரும் இரு தினங்களுக்கு முன்னர் தங்கள் வீட்டில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், இரு தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில் இரண்டு பெண்கள் வீட்டில் சடலமாக கிடப்பதாக எங்களுக்கு தகவல் வந்தது.

சம்பவ இடத்துக்கு சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த நபீனா மற்றும் தயீப்பின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.

இந்த கொலைக்கான காரணம் இன்னும் இன்னும் தெரியவில்லை, சம்பவ இடத்தில் சில கைரேகைகள் கிடைத்துள்ளன.

இருவரையும் கனமான பொருளை கொண்டு தலையில் தாக்கியுள்ளனர், சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers