வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு நடந்த சோகம்!

Report Print Vijay Amburore in இந்தியா

கடலூர் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் தினமும் தன்னுடைய மனைவியுடன் கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீடு மாலையில் தான் திரும்புவார்.

இந்த நிலையில் தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வரும் தம்பதியினரின் மகள் திலகவதி, கல்லூரி முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

வீட்டில் தனியாக இருந்த திலகவதி மாலை 5.30 மணியளவில் தன்னுடைய உறவினருக்கு போன் செய்து, யாரோ தன்னை கத்தியால் குத்திவிட்டதாக கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர், விரைந்து வந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த திலகவதியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் திலகவதி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபர்களை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...