வெளிநாட்டில் கொத்தடிமையாக இருந்த தமிழரை ஒரே வாரத்தில் மீட்க உதவியவர்.... குவியும் பாராட்டுகள்

Report Print Raju Raju in இந்தியா

துபாயில் கொத்தடிமையாக சிக்கி தவித்த தமிழக இளைஞர் ஒரே வாரத்தில் மீட்கப்பட்ட நிலையில் இதற்கு உதவிய மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் அ.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேலு.

வேலைக்காக இவர் துபாய்க்கு சென்ற நிலையில், அங்கு தனக்கு சொன்னபடி வேலையும், உணவும் தராமல் கொத்தடிமையாக நடத்துவதால் தன்னை துபாயிலிருந்து மீட்குமாறு வாட்சப் மூலம் தனது உறவினர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதை தொடர்ந்து தங்கவேலுவின் உறவினர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரான வீரராகவ ராவிடம் இது தொடர்பாக புகார் அளித்தனர்.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கையின் காரணமாக ஒரே வாரத்தில் தங்கவேலு மீட்கப்பட்டு பத்திரமாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

தங்கவேலுவை மீட்க விரைவாக செயல்பட்ட ஆட்சியர் வீரராகவ ராவுக்கு மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்