11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு.. 95 சதவித மாணவர்கள் தேர்ச்சி!

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

கடந்த மார்ச் மாதம் 6ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை, தமிழகத்தில் 11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடந்தது. சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர் இந்த தேர்வினை எழுதினர்.

தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தேர்வு முடிவு இன்று வெளியாகியுள்ளது. இதில் 95 சதவித மாணவ-மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அவர்களில் மாணவிகள் 96.5 சதவிதமும், மாணவர்கள் 93.3 சதவிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் 98.08 சதவீத தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் 97.90 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், கோவை மாவட்டம் 97.60 சதவீத தேர்ச்சியுடன் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளது. 89.29 சதவீத தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும் இந்த தேர்ச்சி விகிதம் அரசு பள்ளிகளில் 90.6 சதவிதமாக உள்ளது. மாணவர்கள் இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையளங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி அறிந்துகொள்ளலாம். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும் அறிந்துகொள்ளலாம்.

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு வருகிற 10, 11ஆம் திகதி மற்றும் 13ஆம் திகதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், வருகை புரியாதவர்களுக்கும் ஜூன் மாதம் 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய திகதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்