திருமணமான பின்பு கணவனுக்கு தெரிந்த மனைவியின் காதல்... அதன் பின் நடந்த விபரீத சம்பவத்தின் பிண்ணனி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் திருமணம் செய்த பெண் ஒருவர் தன்னுடைய காதலனை மறக்க முடியாத காரணத்தினால், அவருடன் சேர்ந்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருக்கு பிரபு என்ற மகன் உள்ளார்.

பட்ட்லியன் சமூகத்தைச் சேர்ந்தவரான பிரபு, அங்கிருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார்.

அப்போது அதே கல்லூரியில் படித்த உடையார்பாளையம் அருகேயுள்ள முனையதிரையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கயல்விழி என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.

இவர்களின் காதல் கயல்விழியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் உடனடியாக சென்னை தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் விஜய் என்பவருடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இருவரும் தனிக்குடித்தனமாக இருந்த நிலையில், கயல்விழிக்கு காதலனின் நினைவுகள் மறக்க முடியாமல் இருந்துள்ளது. இது எப்படியோ கணவன் விஜய்க்கு தெரியவர, இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

அதன் பின் திடீரென்று கயல்விழி தன்னுடைய காதலனை தொடர்பு கொண்டு ஊருக்கு வரும் படி கூறியுள்ளார்.

அதன் படி ஊருக்கு வந்த காதலனுடன், கயல்விழி வீட்டை விட்டு வெளியேறி செல்ல, வீட்டிற்கு வந்த கணவன் மனைவியை காணவில்லை என்று பெற்றோரிடம் கூற, இருவரும் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் கிராமத்திலுள்ள பாலத்திற்கு அருகில் இன்னும் கொஞ்ச நேரத்தில் இச்சம்பவம் ஊர் உலகத்திற்குத் தெரிந்துவிடும்.

ஜாதி என்ற காரணத்தால் நம்மை வாழவிடமாட்டார்கள். நம்மைப் பிரித்துவிட்டார்கள். இனி நாம் சாவிலாவது ஒன்று சேர்வோம் என்று இருவரும் ஊசிபோட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இதில் கயல்விழி மயங்கிவிட, ஆனால் பிரபுவிற்கு ஒன்றும் ஆகாததால், அவளே இறந்துவிட்டாள் இனி நாம் எதற்கு என்று அருகில் இருந்த மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரியவர விரைந்து வந்த பொலிசார் பிரபுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, கயல்விழியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருதால், பொலிசார் இது குறித்து விசாரணை நடத்துவதற்காக சம்பவம் நடந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு பார்த்த போது, ஊசி ரத்தத்துடன் தரையில் கிடந்துள்ளது. அதுமட்டுமின்றி பிரபு, கயல்விழி இருவரும் அணிந்திருந்த காலணிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...