ஆண்டிற்கு ஒரு கொலை... லொட்டரி அதிபர் மார்ட்டின் பற்றி பகீர் கிளப்பும் சாந்தாமணி!

Report Print Vijay Amburore in இந்தியா

லொட்டரி அதிபர் மார்ட்டின் ஆண்டிற்கு ஒரு கொலை செய்வதாக, இறந்த பழனிச்சாமியின் மனைவி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

கோவையை சேர்ந்த லொட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த வாரம் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஏராளமான பணக்கட்டுகளும், நகைக்குவியல்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், மார்டினிடம் காசாளராக பணி புரிந்த பழனிசாமி என்பவர் மர்மமான முறையில் திடீரென உயிரிழந்தார்.

அவருடைய இறப்புக்கு மார்ட்டின் நிறுவனத்தாரும், வருமானவரித்துறை அதிகாரிகளும் தான் காரணம் என அவருடைய மனைவி சாந்தாமணி மற்றும் மகன் ரோஹின் குமார் ஆகியோர் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்த நிலையில் பொலிஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சாந்தாமணி, மார்ட்டின் ஆண்டிற்கு ஒரு கொலை செய்கிறார். என் கணவருடைய மரணத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் மார்ட்டின் நிறுவனத்தார் மீது தான் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதிகாரிகளிடம் என் கணவர் உண்மையை கூறிய பின்னரும் அவரை அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் எனக்கும் என்னுடைய மகன்களுக்கும் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அதற்கு மார்ட்டின் மற்றும் அவரின் மனைவி லீமா ரோஸ் தான் பொறுப்பு என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers