திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடியை தீ வைத்து எரித்த உறவினர்கள்!

Report Print Vijay Amburore in இந்தியா

மகாராஷ்டிராவில் கலப்பு திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடியை உறவினர்கள் தீ வைத்து எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 23 வயதான மங்கேஷ் ரான்சிங், கடந்த 6 மாதத்திற்கு முன்பு ருக்மிணி (19) என்பவரை காதலித்தது திருமணம் செய்துள்ளார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ருக்மணியின் வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ருக்மணி தன்னுடைய கணவருடன் சண்டையிட்டு தாய் வீட்டிற்கு கிளம்பியுள்ளார்.

அவரை அழைத்து வருவதற்காக சென்ற மங்கேஷை, ருக்மணியின் தந்தை ராம பாரதி மற்றும் அவருடைய மாமன்கள் இரண்டு பேர் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென புதுமணத்தம்பதியினர் இரண்டு பேரின் மீதும் மண்ணெண்னையை ஊற்றி, ருக்மணியின் உறவினர்கள் தீ வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ருக்மணியின் மாமா சுரேந்திர பாரதியா மற்றும் கன்சன் சரோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், தலைமறைவாக இருக்கும் ராம பாரதியை தீவிரமாக தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், 70 சதவீத தீக்காயங்களுடன் ருக்மணியும், 50 சதவீத தீக்காயங்களுடன் மங்கேஷும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...