9 மணி நேரம் அறுவை சிகிசிச்சை... இளம்பெண்ணை சடலமாக விட்டு தப்பி சென்ற மருத்துவர்!

Report Print Vijay Amburore in இந்தியா

மகாராஷ்டிரா மாநிலத்தில் தாடை அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண், சடலமாக ஒப்படைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தனுஸ்ரீ ஜாதவ்(19) என்கிற இளம்பெண்ணுக்கு பற்களின் வளர்ச்சி சரியாக அமையவில்லை.

தாடையில் அறுவை சிகிச்சை செய்தால் சரியாகிவிடும் என மருத்துவர் ராம் பட்டில், தனுஸ்ரீ பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அதன்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனுஸ்ரீக்கு, ஏப்ரல் 23ம் திகதியன்று அறுவை சிகிசிச்சை மேற்கொள்ளப்பட்டது.

9 நேரம் கடந்தும் கூட மருத்துவர்கள் அறுவை சிகிச்சை குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இதனால் உறவினர்கள் அனைவரும் பெரும் குழப்பமடைந்திருந்த வேளையில், தனுஸ்ரீ அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். அப்போது தனுஸ்ரீ சுயநினைவில்லாமல் இருப்பதை உறவினர்கள் கவனித்துள்ளனர்.

இந்த சமயத்தில் வேறு ஒரு மருத்துவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, மருத்துவர் ராம் பட்டில் தன்னுடைய வீட்டிற்கு கிளம்பியுள்ளார்.

12 நீண்ட நேரம் கழித்து வெளியில் வந்த மருத்துவக்குழு தனுஸ்ரீ இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தனுஸ்ரீயின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

மேலும் உடலை வாங்க மறுத்து, மருத்துவரை கைது செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தனுஸ்ரீயின் மாமா கைலாஸ் ஜாதவ் நிக்டி கூறுகையில், இது ஒரு கொலை. தனுஸ்ரீ நல்ல உடல்நிலையில் தான் இருந்தார். அவருக்கு பற்கள் அதிகமாக இருந்ததால் மட்டுமே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சிறிய அறுவை சிகிச்சை என்று தான் நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் நீண்ட நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது எங்களுக்கு பயத்தை அதிகரித்தது.

அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்ட போது நாங்கள் பலமுறை போன் செய்து பார்த்தோம். மருத்துவமனையில் இருந்து கிளம்பிய மருத்துவர் எங்கள் போன் அழைப்பிற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என கூறியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் கூறுகையில், தனுஸ்ரீ ஒரு அரிதான கஷ்டத்தை அனுபவித்தார். அறுவை சிகிச்சை 9 மணிநேரம் மேற்கொள்ளப்படும் என அவருடைய குடும்பத்தாரிடம் முன்னமே நாங்கள் கூறியிருந்தோம். அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் உணர்ச்சியுடன் தான் இருந்தார். என்னுடைய கேள்விகளுக்கு பதில் கொடுத்தார என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...