இலங்கை தாக்குதல் !பெங்களுரை அதிர வைத்த வாட்ஸ்அப் மெசேஜ்

Report Print Gokulan Gokulan in இந்தியா

இலங்கை தாக்குதல் எதிரொலியாக பெங்களுரில் பொலிசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தி வந்த நிலையில் வாட்ஸ்அப்பில் பரவிய மெசேஜால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் 253 போ் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான பெங்களுரில் பொலிசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய நடவடிக்கையில் யாரேனும் ஈடுப்பட்டால் உடனே பொலிசாருக்கு தகவல் அளிக்கும் படியும்.

மேலும் புதிதாக குடி வருபவர்களின் பின்புலம் குறித்து விசாரிக்கும் படியும் அறிவுறுத்தியுள்ளனர்.

பொலிசார் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் 5 பேர் கொண்ட கும்பல் பெங்களுரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வாட்ஸ் அப்பில் மெசோஜ் ஒன்று பரவியுள்ளது.

இந்த வாட்ஸ் மெசோஜ் போலியானது என பெங்களுரு நகர பொலிசார் தனது அதிகாரப்பூர்வமான ட்டுவிட்டர் பக்கத்தில் உடனே பதிவிட்டனர்.

இதுகுறித்து விளக்கமளித்த பெங்களுரு பொலிஸ் ஆணையர், மக்களிடையே பதற்றதை அதிகரிக்கவே இதுபோன்ற போலி செய்தி மற்றும் தவறான தகவல்கள் பரப்ப படுகிறது.

மக்கள் இதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம். இதற்காக தான் தாங்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers