கணவர் செய்து வந்த மோசமான செயல்... கண்டுபிடித்து துணிச்சலுடன் வெளியில் கூறிய மனைவி... குவியும் பாராட்டுகள்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் பணம் சம்பாதிக்க கணவர் செய்து வந்த மோசடி வேலைகளை மனைவி துணிச்சலுடன் வெளியில் கூறியுள்ளார்.

திண்டுக்கல் அருகே புதுநகரைச் சேர்ந்தவர் குமரேசன். இவர், உள்ளூரில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், குமரேசன் வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்தே ரேஷன் பொருட்களை திருடி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பது போன்ற பல வேலைகளை செய்த நிலையில் அதை அவர் மனைவி ரங்கநாயகி கண்டுப்பிடித்தார்.

மேலும், குமரேசன் போலி ஸ்மார்ட் கார்டுகளை தயாரித்து, அதன்மூலமாக, மக்களுக்கு வழங்க வேண்டிய அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை முறைகேடு செய்து பணம் சம்பாதித்து வருவதையும் கண்டுபிடித்தார் ரங்கநாயகி.

இதையடுத்து கணவரின் செயல்கள் பிடிக்காமல் ரங்கநாயகி இது குறித்து புகார் கொடுத்துள்ளதோடு அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.

கணவரின் ஏமாற்று வேலையை வெளியுலகுக்கு துணிச்சலுடன் தெரிவித்த ரங்கநாயகியின் நேர்மையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers