தேர்தலின்போது வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த நபர்!

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் தேர்தலின்போது வாக்குப்பதிவு இயந்திரத்தை நபர் ஒருவர் உடைத்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் 5ஆம் கட்டத்தில், 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் போட்டியிடும் அமேதி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியிலும் வாக்குப்பதிவு விறுவிறுவென நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் 5ஆம் கட்ட தேர்தலில் சுமார் 8 கோடியே 75 வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் வாக்களிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தான் போட்டியிடும் லக்னோ தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார். மேற்குவங்கத்தின் பாரக்பூர் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் அர்ஜுன் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும், பொலிசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில் பீகாரின் சாப்ரா தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில், 131வது வாக்குச்சாவடிக்குள் நுழைந்த ரஞ்சித் பாஸ்வான் என்பவர் ஈ.வி.எம் எனும் வாக்கு இயந்திரத்தை கீழே போட்டு உடைத்தார். இதில் அந்த இயந்திரம் இரண்டாக உடைந்தது. அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணத்திற்காக பொலிசார் அவரை கைது செய்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers