தமிழர்கள் குறித்து நான் அப்படி பேசவே இல்லை.... ஒரு போதும் மன்னிப்பு கேட்கமாட்டேன்: நடிகர் பிரகாஷ் ராஜ்

Report Print Deepthi Deepthi in இந்தியா

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் அதிகம் படிப்பதால் டெல்லி மாணவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது என்று முதல்வர் கெஜ்ரிவால் பேசியதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மாணவர்கள் அதிகம் படிப்பதால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது, இதனால் டெல்லி மாணவர்களின் உரிமை மற்றும் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுகிறது என கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியை ஆதரித்து பிரச்சாரம் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ், டெல்லியன் கல்வி தரத்தை கெஜ்ரிவால் உயர்த்தியுள்ளார்.

தமிழக மாணவர்கள் குறித்து கெஜ்ரிவால் இப்படி சொல்வதில் தவறு எதுவும் கிடையாது.

டெல்லி மாணவர்களின் உரிமை தமிழக மாணவர்களால் தட்டிப்பறிக்கப்படுகிறது. நான் தமிழனாக இருந்து கொண்டு இப்படி பேசலாமா என்கிறார்கள். நான் தமிழன் அல்ல. நான் கன்னடன் என்று பிரகாஷ் ராஜ் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழக முதல்வர் பழனிச்சாமியும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகத்தை சேர்ந்தவர் என்றும் அதனால்தான் இப்படி பேசுகிறார் என தமிழக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.

தமிழக முதல்வரின் கருத்துக்கு பதிலளித்துள்ள பிரகாஷ் ராஜ், என்னுடைய கருத்து அரசியலாக்கப்பட்டுள்ளது. என் கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது.

நான் தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுகிறேன் என்ற குற்றச்சாட்டு பச்சைப் பொய். இந்த விவகாரத்தில் நான் மன்னிப்பு கேட்கமாட்டேன். நான் ஒருபோதும் தமிழர்களுக்கு எதிராக பேசியதில்லை என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தமிழக மாணவர்களுக்கு எதிராக பேசியதற்காக கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...