உயிரிழந்த கணவன்... கால்களை இழந்த மனைவி.... பிச்சையெடுக்கும் பெற்றோர்... கண்ணீர் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் இரண்டு கால்களை இழந்த மாற்றுத்திறனாளிப் பெண்ணை அவரது வயதான பெற்றோர் பிச்சை எடுத்து காப்பாற்றி வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உனிசெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜப்பா - மாதேவம்மாள் தம்பதியினர்.

இவர்களின் மகள் சுஜாதாவை, சூளகிரியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

ஆனால் கணவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிடவே, செய்வதறியாது திகைத்த சுஜாதா, தனியார் கல்லூரியில் தினக்கூலியாக வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சாலையை கடக்கும் போது ஏற்பட்ட விபத்தில் தன்னுடைய இரண்டு கால்களும் இழந்தார் சுஜாதா.

கணவரையும் இழந்து, இரண்டு கால்களையும் பறிகொடுத்து ஆதரவின்றி நிர்கதியாக நின்ற சுஜாதா மீண்டும் தன்னுடைய பெற்றோர் ஊரான உனிசெட்டிக்கு வந்துவிட்டார்.

ஆனால் வயதான காலத்தில் வேலைக்கு சென்று மகளைக் கவனிக்க முடியாத வயதான பெற்றோர், பிச்சை எடுத்து கொண்டு வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்துகின்றனர்.

சுஜாதா கூறுகையில், 4 ஆண்டுகளுக்கு முன்பே மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டையும், உதவித்தொகைக்கான அட்டையும் வழங்கப்பட்ட நிலையில் இதுநாள் வரை உதவித்தொகை கிடைக்கவில்லை.

இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers