வெளிநாட்டிலிருந்து பைக்கிலேயே தமிழகம் வந்த 3 தமிழர்கள்! எதற்காக? ஆச்சரிய தகவல்

Report Print Raju Raju in இந்தியா

சிங்கப்பூரில் இருந்து மூன்று தமிழர்கள் 13,000 கி.மீட்டர் பைக்கிலேயே பயணம் செய்து தமிழகம் வந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த பாலச்சந்திரன், பன்னீர்செல்வம், அருணகிரி ஆகிய மூன்று பேரும் தமிழகத்தின் தஞ்சாவூரில் உள்ள பெரியகோவிலுக்கு அதிநவீன பைக்கில் வந்துள்ளனர்.

இது குறித்து மூவரும் கூறுகையில், சிங்கப்பூர் தோற்றுவிக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆகிறது. இதனை மற்ற நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில், நாங்கள் மோட்டார் சைக்கிள் மூலம் பயணம் வந்துள்ளோம்.

நாங்கள் சிங்கப்பூரில் சொந்தமாக தொழில் செய்துவருகிறோம். அங்கிருந்து, கடந்த மார்ச் 26-ம் திகதி பயணத்தைத் தொடங்கி மலேசியா, தாய்லாந்து, மியான்மர், பங்களாதேஷ், திபெத், நேபாள் வழியாக இந்தியாவுக்கு வந்தோம்.

பெரும்பாலும் சாலை மார்க்கம் வழியாகவே பயணித்த நிலையில் சில இடங்களில் கடல் மார்கமாகப் படகில் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு பயணம் செய்தோம்.

சென்னையில் பயணத்தை 8ஆம் திகதி நிறைவு செய்கிறோம். பின்னர், விமானம் மூலம் மீண்டும் சிங்கப்பூர் செல்ல உள்ளோம். இதன்மூலம் 13,000 கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers