திருமணத்திற்கு முன் கர்ப்பம்..... காட்டுக்குள் எரித்துக்கொலை செய்யப்பட்ட கர்ப்பிணி: விசாரணையில் அம்பலமான உண்மை

Report Print Deepthi Deepthi in இந்தியா

புதுச்சேரியில் உள்ள முந்திரி காட்டுக்குள் கடந்த 30 ஆம் திகதி எரித்துக்கொலை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அப்பாதுரை என்பவர் தனது சகோதரியை காணவில்லை என பொலிசில் புகார் அளித்திருந்த நிலையில், காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட சடலத்தை அப்பாதுரையிடம் காட்டியபோது, அது அவரது சகோதரி லட்சுமியின் சடலம் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

தனது தந்தையின் இழப்புக்கு பின்னர் குடும்ப கஷ்டத்தை போக்க பாத்திர கடையில் லட்சுமி வேலை பார்த்து வந்துள்ளார். கடையில் விசாரித்ததில் கடந்த 30 ஆம் திகதி லட்சுமியை வேன் டிரைவர் அருண்குமார் என்பவன் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது தெரியவந்தது.

செல்போன் மூலம் அருண்குமாரை கண்டுபிடித்த பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் அருண்குமார் மீது சந்தேகமடைந்த தீவிர விசாரணைக்கு உட்படுத்தியதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

லட்சுமியும், அருண் குமாரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், லட்சுமிக்கு திருமண ஆசை காட்டி அவரிடம் எல்லை மீறியுள்ளார். இவர்களது காதலுக்கும் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், திருமணம் செய்துகொள்வதை அருண்குமார் தள்ளிப்போட்டுள்ளார். இதற்கிடையில் லட்சுமி கர்ப்பமாகியுள்ளார். நான் உன்னுடன் தனியாக பேசவேண்டும் என கூறி, அழைத்து சென்று, கருவை கலைத்து விடு என அருண்குமார் கூறியுள்ளார்.

இதற்கு லட்சுமி மறுத்துவிடவே, இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் உருட்டுகட்டையால் லட்சுமியை அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து தனது நண்பனுக்கு போன் செய்து வரவழைத்து லட்சுயின் உடலை முந்திரி காட்டுக்கு கொண்டு சென்று அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அருண்குமார் மற்றும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டு, முக்கிய தடயங்களும் சேகரிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers