120 நாட்களில் மணக்கோலத்தில் செல்ல வேண்டிய இளம் பெண்: பிணக்கோலத்தில் சென்ற சோகம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருப்பூர் மாவட்டத்தில் 4 மாதங்களில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் தனது காதலனுடன் ஏற்பட்ட பிரச்சனையில் பெண் பொலிஸ் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

23 வயதான பர்வீன் பாபி 2017 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணியில் சேர்ந்தார்.

இவர் கடந்த 6 மாதகாலமாக தன்னுடன் பணியாற்றும் பொலிஸ்காரரை காதலித்து வந்துள்ளார். இவர்களது திருமணத்திற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து 4 மாதத்தில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில் பர்வீன் பாபி, அதிகாரிகள் முன்னிலையில் தனது காதலனை வாடா போடா என்று மரியாதை குறைவாக பேசியுள்ளார். இதனால் கோபம் அடைந்த காதலன், பர்வீன் பாபி வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்து, உங்களது மகள் மரியாதை குறைவாக நடந்துகொள்கிறாள், அவளுக்கு அறிவுரை சொல்லிகொடுங்கள் என கூறியுள்ளார்.

இதன்போது, அங்கு வந்த பர்வீன் பாபிக்கும், அவருடைய காதலருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சனையால் மன வேதனையடைந்த பர்வீன் விஷம் குடித்துள்ளார். சிறிது நேரம் கழித்து தனது தாயிடம் தான் விஷம் குடித்துவிட்டதாக தெரிவித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

4 மாதத்தில் மணக்கோலத்தில் செல்ல வேண்டிய பர்வீன் இறந்துபோனது சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொலிசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers